Published : 11 May 2016 09:33 AM
Last Updated : 11 May 2016 09:33 AM

சதுர்த்தி பூஜையால் விஜயகாந்த்துக்கு தேர்தலில் வெற்றி கிடைக்குமா?

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலை வர் விஜயகாந்த், நேற்று முன் தினம் இரவு தனது மனைவி பிரேமலதாவுடன் உளுந்தூர் பேட்டையில் உள்ள மாஷபுரீஸ் வரர் கோயிலில் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் களம் காணும் விஜயகாந்த், ‘ரி’ என்ற எழுத்தில் முடியும் கடவுள் பெயர் கொண்ட கோயில் அமைந்துள்ள பகுதிகளில் போட்டி யிடுவதாக ஏற்கெனவே ‘தி இந்து’வில் செய்தி வெளியிட்டி ருந்தோம்.

அதன்படி மூன்றாம் முறை யாக களம் காணும் விஜய காந்த், மாஷபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ள உளுந்தூர்பேட் டையில் வேட்புமனு தாக்கல் செய்தபின், முதல் பிரச்சாரத்தை எலவனாசூர்கோட்டையில் தொடங்கினார். இந்நிலையில் 2-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்று முன்தினம் தொடங்கிய விஜய காந்த், பிரச்சாரத்தின் இடையே உளுந்தூர்பேட்டையில் உள்ள மாஷபுரீஸ்வரர் கோயிலுக்கு தனது மனைவி, மைத்துனருடன் சென்று சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் பரிக்கல் கிராமத்தில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோயில் சதுர்த்தி பூஜையிலும் கலந்துகொண்டார்.

தெய்வ நம்பிக்கை கொண்ட விஜயகாந்த், கடந்த 2011 சட்டப் பேரவை தேர்தலின்போதும் மாஷபுரீஸ்வரர் கோயிலில் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் சதுர்த்தி சிறப்பு பூஜையில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x