Published : 13 May 2022 04:56 AM
Last Updated : 13 May 2022 04:56 AM

செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

உலக செவிலியர் தினத்தையொட்டி, வேலூர் அண்ணா சாலையில் விழிப்புணர்வு பேரணி சென்ற தமிழ்நாடு எம்.பி.ஆர் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.

சென்னை: சர்வதேச செவிலியர் தினம் நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகள் வருமாறு:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவருக்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மருத்துவர்களுக்கு பக்கபலமாகவும், நோயாளிகளுக்கு பக்கத் துணையாகவும், மருத்துவச் சேவையின் தூண்களாகவும் நின்று, கரோனா உச்சத்தில் இருந்த நிலையிலும் அச்சமின்றி சேவையாற்றிய வெள்ளுடை தியாகிகளுக்கு வணக்கத்தையும் வாழ்த்தையும் பகிர்ந்து கொள்வோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மருத்துவமனைகளில் நோயுற்று வரும் மக்களுக்கு அன்புடனும் பரிவுடனும் சேவையாற்றி வரும் செவிலியர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்: செவிலியர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். செவிலியர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பணிச்சூழலையும் அமைத்து தருவதற்கான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பொதுநலத்தோடு மருத்துவ சேவையை செய்யும் செவிலியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்கள் வகுத்து, அவர்களின் வளமான வாழ்வுக்கு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x