

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக கருதி கண் துஞ்சாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தொண்டர் களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. அதற்கு முன் நீங்கள் அனைவரும் சில இன்றியமையாத பணிகளை செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுகிறேன். இலங் கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட காரண மாக இருந்த ஓர் அரசியல் கூட்டணி ‘கூடா நட்பு’ என பிரிந்தது. இன்று ‘ஒட்டிப் பிறந் தவர்கள்’ என கூறி மக்கள் முன் கைகோர்த்துள்ளது. இலங் கையில் உரிமைகளை மீட்க போராடும் தமிழர்களின் முயற்சி களுக்கு இக்கூட்டணி ஆபத்து ஏற்படுத்தும் என்பதை வாக் காளர்களிடம் கூறுங்கள்.
பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், திரைப்படத் துறை, கிரிக்கெட் போட்டிகள் உரிமை உள்ளிட்ட அனைத்து தொழில் முயற்சிகளும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதை வாக்காளர்களுக்கு நினைவுபடுத்துங்கள்.
கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில், நில அபகரிப்பு உட்பட மக்களின் உரிமை, உடைமைகள் பறிக்கப்பட்ட நிலை இருந்ததை வீடு வீடாக அவசியம் எடுத்துக் கூற வேண்டும். பல குற்றங்களை செய்த திமுக, அவற்றை மக்கள் மனதில் இருந்து அகற்ற, 2 ஜி அலைக்கற்றை உள்ளிட்ட பல ஊழல்களில் சம்பாதித்த பெரும் பணத்தைக் கொண்டு, ஒரு சில ஊடகங்கள், பத்திரிகைகள் வழியாக முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளை நீங்கள் உங்களின் அயராத உழைப்பின் மூலம் முறியடிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் பல்வேறு நிலைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு பயன் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாதனைகளை எடுத்துக் கூறுங்கள். சாதனைகள் தொடர, நான் ஆழ்ந்து யோசித்து தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளேன்.
பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர் அல்லது மொபெட், விவசாயக் கடன்கள் ரத்து, மாணவர்களின் கல்விக் கடன் சுமையை அரசே ஏற்பது, அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் இலவச கைபேசி, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், திருமண நிதியுதவி திட்டத்தில் தாலிக்கு 8 கிராம் தங்கம், அம்மா பேங்கிங் கார்டு போன்ற முக்கியமான அம்சங் களை அச்சிட்டு, வீடுதோறும் வழங்கி வாக்கு சேகரிக்க வேண்டியது உங்கள் கடமை.
என் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, இப்பணிகளை செய்து, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற நீங்கள் கண் துஞ்சாமல் பணியாற்ற வேண்டும். 234 தொகுதிகளிலும் நானே வேட் பாளராக களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வோடு நீங்கள் அனை வரும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.