

கோவையில் தேர்தல் நடத்தும் அலுவலரின் வாகனத்தில் வைத்து அரசியல் கட்சியினர் பணம் கொண்டு செல்வதாக கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தேர்தல் பார்வையாளரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் மாநக ராட்சி உதவி ஆணையர் காந்திமதி, தேர்தல் நடத்தும் அலு வலராக உள்ளார். இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க அரசியல் கட்சியினர் பணம் எடுத்துச் செல்வதாக பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தொகுதியின் தேர் தல் பார்வையாளரான ஜோதி கைலாஷிடம் நேற்று அவர் தனது புகார் மனுவை அளித்தார்.
அந்த மனுவில், தெற்கு தொகுதி தேர்தல் நடத் தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோருக்கு வழங்கப் பட்டுள்ள வாகனங்களில் அதிமுக வினர் பணம் எடுத்துச் செல்வ தாக தெரியவந்துள்ளது.இந்த விவகாரத்தில் அரசியல் கட்சி யினரின் செயல்பாடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டுவருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் காந்திமதி கூறும்போது, ‘புகாரில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்துமே தவறானவை’ என்றார்.