சென்னையில் 21-ல் பாஸ்போர்ட் மேளா

சென்னையில் 21-ல் பாஸ்போர்ட் மேளா
Updated on
1 min read

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற சிறப்பு பாஸ்போர்ட் மேளாவில் 1,355 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலம் நேர்காணலுக்கான நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து பங்கேற்கலாம். இதற்கான, ஆன்லைன் முன்பதிவு மே 17-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த சிறப்பு மேளாவில் தத்கால் முறையில் விண்ணப்பிப்பவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த சிறப்பு மேளா மூலம் சுமார் 2000 விண்ணப்பதாரர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in