Last Updated : 19 May, 2016 03:55 PM

 

Published : 19 May 2016 03:55 PM
Last Updated : 19 May 2016 03:55 PM

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் - திமுக கூட்டணி

புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்று பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களில் மட்டும் வென்றது.

புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் 30 தொகுதிகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியானது காமராஜ்நகர், லாஸ்பேட், நெல்லித்தோப்பு, ஏம்பலம், ஏனாம், அரியாங்குப்பம், வில்லியனூர், நெட்டப்பாக்கம் , ராஜ்பவன், மணவெளி திருநள்ளாறு, காலாப்பட்டு, பாகூர், ஊசுடு, உழவர்கரை ஆகிய 15 தொகுதிகளில் வென்றது. கூட்டணியான திமுக உருளையன்பேட்டை, நிரவி டி.ஆர். பட்டிணம் ஆகிய இரு தொகுதிகளில் வென்றது.

என்.ஆர்.காங்கிரஸ் இந்திராநகர், கதிர்காமம், காரைக்கால் வடக்கு, மங்களம், மண்ணாடிப்பட்டு, நெடுங்காடு, தட்டாஞ்சாவடி, திருபுவனை ஆகிய 8 தொகுதிகளில் வென்றுள்ளது.

அதிமுக உப்பளம், முத்தியால்பேட் முதலியார்பேட்டை மற்றும் காரைக்கால் தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் வென்றது. மாஹேயில் மக்கள் நலக்கூட்டணி ஆதரவு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

புதுச்சேரியில் 16 தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தால் ஆட்சியமைக்கலாம். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 இடங்களை வென்றதால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

அமைச்சர்கள் தோல்வி

ஆளுங்கட்சி அமைச்சர்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவா ஆகிய அனைவரும் தோல்வியடைந்தனர். சபாநாயகர் சபாபதி, அரசு கொறடா நேரு, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் பாலன் என முக்கியமானவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x