இலங்கைக்கு நிவாரண பொருட்கள்: 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

இலங்கைக்கு நிவாரண பொருட்கள்: 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு
Updated on
1 min read

சென்னை: இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருட்கள் அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள் ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்தப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலர் ஜெசிந்தா லாலரஸ், நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர், ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in