Published : 12 May 2022 03:58 PM
Last Updated : 12 May 2022 03:58 PM

தாயுள்ளம் படைத்த செவிலியரின் பணியை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம் என்று உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துக்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவர்க்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துகள்!

தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x