Last Updated : 14 May, 2016 02:42 PM

 

Published : 14 May 2016 02:42 PM
Last Updated : 14 May 2016 02:42 PM

அம்பாசமுத்திரத்தில் வரிந்து கட்டும் வாரியத் தலைவர் - முன்னாள் சபாநாயகர்

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் முருகையாபாண்டியனுக்கும், திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இத்தொகுதியில் அம்பாசமுத்திரம் தாலுகாவின் ஒரு பகுதியும், அம்பா சமுத்திரம், விக்ரமசிங்கபுரம், சிவந்தி புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல் லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலசெவல், கோபாலசமுத்திரம், மணிமுத்தாறு பேரூராட்சிகளும், 34 ஊராட்சிகளும் உள்ளன.

இத்தொகுதியில் பெரும்பான்மை யினராக தேவர் சமுதாயத்தினரும், அதற்கு அடுத்தபடியாக நாடார், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் உள்ளனர். இல்லத்து பிள்ளைமார், செட்டியார், முஸ்லிம்கள், கிறிஸ்தவர் கள், முதலியார் சமுதாயத்தினரும் கணிசமான அளவில் வசிக்கின்றனர். பீடி சுற்றும் தொழிலாளர்கள், விவ சாய தொழிலாளர்கள் இத் தொகுதி யில் கணிசமாக உள்ளனர்.

1952 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தலா 4 முறையும், மார்க்சிஸ்ட், திமுக வேட்பாளர்கள் தலா 2 முறையும், என்.சி.ஓ., சுயேச்சை வேட்பாளர் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2006 தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.ஆவுடையப்பனும், 2011 தேர்தலில் அதிமுக வேட் பாளர் இசக்கிசுப்பையாவும் வெற்றி பெற்றனர். தற்போதைய தேர்தலில் மொத்தம் 19 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் அதிமுக வேட்பாளர் ஆர்.முருகை யாபாண்டியன், திமுக வேட்பாளர் இரா.ஆவுடையப்பன், மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.கற்பகவல்லி, பாஜக வேட்பாளர் வி.சசிகலா, பாமக வேட்பாளர் இரா.அன்பழகன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் இ.கணேசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ச.தென்னரசு, பார்வர்டு பிளாக் வேட்பாளர் ஏ.வேல்முருகன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

இவர்களில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவரான முருகையா பாண்டியனுக்கும், திமுக வேட்பாளராக போட்டியிடும் ஆவுடையப்பனுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது.

அதிமுக வேட்பாளர்

தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான முருகையா பாண்டியன், கட்சியினரின் வீடுகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் செல்வதை வாடிக்கையாக கொண் டிருக்கிறார். இதனால் கட்சியில் அடிமட்ட தொண்டர்கள் வரையில் இவரை அணுகமுடியும் என்பது அதிமுகவினரிடையே இருக்கும் பரவலான கருத்து. தொகுதிக் குள் இருக்கும் தேவர் சமுதாயத் தினரின் வாக்குகளை குறிவைத்து அதிமுகவினர் தீவிர பணியாற்று கிறார்கள். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் தக்கவைக்க அக்கட்சியின் தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக வேட்பாளர்

ஆளுங்கட்சி மீதான அதிருப்தியே திமுகவுக்கு பலமாக இருக்கிறது. இதுபோல் தாழ்த்தப்பட்ட சமுதாயத் தினரின் வாக்குகளும், முஸ்லிம்களின் வாக்குகளும் திமுகவுக்கு கணிசமாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. தேவர், நாடார் சமுதாய வாக்குகளை அதி முக, திமுக இரு வேட்பாளர்களும் பிரிப்பார்கள்.

அதேவேளை கடந்த 2006-2011-ம் ஆண்டில் இத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு சபாநாயகராக ஆவுடையப்பன் இருந்தபோது இத்தொகுதியில் திமுகவினரின் செயல்பாடுகள் குறித்த அதிப்தியை மக்கள் இப்போதும் நினைவில் வைத்துள்ளனர். எம்.எல்.ஏ. ஆகிவிட் டால் எளிதாக அவரை சந்திக்க முடியாது என்ற கருத்து திமுகவுக்கு பாதகமாக உள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி

பீடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மற்றும் சங்கங் களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் களமிறங்கியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கற்ப கவல்லி கணிசமாக வாக்குகளை பிரிக்கும் வாய்ப்புள்ளது. தொழிற் சங்க பலமுள்ள இடங்களில் இவருக்கு வாக்குகள் அதிகம் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x