ஆட்டோக்களுக்கான புதிய கட்டண நிர்ணயம்: அதிகாரிகள் 2 நாள் ஆலோசனை

ஆட்டோக்களுக்கான புதிய கட்டண நிர்ணயம்: அதிகாரிகள் 2 நாள் ஆலோசனை

Published on

சென்னை: ஆட்டோக்களுக்கான கட்டண நிர்ணயம் தொடர்பாக, இன்று தொழிற்சங்கங்களுடனும், நாளை நுகர்வோர் அமைப்புகளுடனும் போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு அடிப்படை கட்டணமாக ரூ.25-ம், அடுத்தடுத்த கிலோ மீட்டர்களுக்கு தலா ரூ.12-ம் என கடந்த 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ள நிலையில் ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று மாலை அசோக் பில்லர் பகுதியில் உள்ள போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் போக்குவரத்து ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து நாளை, நுகர்வோர் அமைப்புகள், பயணிகள் சங்கங்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் அரசு கட்டணத்தை நிர்ணயித்து அறிவிக்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in