

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் பலரும் உயிரிழக்கும் சூழல் உருவானகு. மேலும், பலர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்கவும், பறக்க விடவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதை மீறியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதையும் மீறி மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து, விற்றவர்கள் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாஞ்சா நூல் பட்டம் மீதான தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி கடந்த 10-ம் தேதி முதல், வரும் ஜூலை 8-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.