Published : 17 Jun 2014 08:05 AM
Last Updated : 17 Jun 2014 08:05 AM

பதவியை காலி செய்த துர்கேஸ்வரி யார்?

ஆசிக் மீராவின் பதவி பறிபோக காரணமான துர்கேஸ்வரி(28), திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோட்டில் வசிக்கிறார். அவர்றன ‘தி இந்து’விடம் தெரிவித்தது:

2006-ம் ஆண்டு தனியார் வங்கியில் இன்ஸ்சூரன்ஸ் ஆலோசகராக இருந்த என்னை விரட்டி விரட்டிக் காதலித்தார் ஆசிக் மீரா. 2006 ஏப்ரல் மாதம் ஆரம்பித்த எங்களது காதல் டிசம்பர் 14-ல் திருமணத்தில் முடிந்தது. அன்று மலைக்கோட்டை அருகேயுள்ள விநாயகர் கோயில் முன் தாலி கட்டி என்னை மனைவியாக்கிக் கொண்டார். அவர் மரியம் பிச்சையின் கார் டிரைவர் எனச் சொல்லி எனக்கு அறிமுகமானார். திருமணத்துக்குப் பிறகுதான் அவர் மரியம் பிச்சையின் மகன் என எனக்குத் தெரியும்.

கடன் தொல்லை தீரட்டும் என்று காலம் கடத்தினார்…

அவருக்கு 28.5.2007-ல் அவரது அத்தை பெண்ணுடன் ஊரறிய திருமணம் நடைபெற்றது. இதுபற்றி நான் கேட்டதற்கு நீதான் எனது முதல் மனைவி. முஸ்லிம் மதத்தில் ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம். நான் உன்னை கைவிடமாட்டேன் என வாக்குறுதி கொடுத்தார். என்னை ஊரறிய மனைவியாக ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் தெரிவியுங்கள் என கேட்கும்போதெல்லாம், “கடன் தொல்லை தீரட்டும்” என காலம் கடத்திவந்தார்.

அவரது அப்பா மரியம் பிச்சை அமைச்சராக இருந்து இறந்துபோன பிறகு இவர் கவுன்சிலராக இருந்து பிறகு துணை மேயராகவும் ஆகிவிட்டார். இப்போது அவருக்கு நிறைய நண்பர்களும், வசதியும் வந்து சேர அவரது போக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. மூன்றுமுறை என்னை கர்ப்பமாக்கி கட்டாயப்படுத்தி கலைக்கச் செய்தார். 27.5.2013 அன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்து புகார் கொடுத்தேன். அங்குள்ள ஒரு அதிகாரி இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்து என்னை தனிக்குடித்தனம் வைக்கும்படி உத்தரவிட்டார்.

கொலை மிரட்டல்...

அதன்படி என்னை தனிக்குடித்தனம் வைத்த ஆசிக் மீரா சில மாதங்கள் நல்லவிதமாக வந்துபோய்க்கொண்டிருந்தார். மறுபடியும் நான் 4-வது முறையாக ஆகஸ்ட் 2013 அன்று கர்ப்பமான விஷயம் தெரிந்ததும் என்னை புறக்கணிக்க ஆரம்பித்தார். ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவரது நண்பர் கள் சிலரும் அவரது அத்தையும் என்னை கொலை செய்துவிடுவதாக அடிக்கடி மிரட்டுகின்றனர். அடிக் கடி இரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைப்பதுபோல் தட்டி விட்டு ஓடிவிடுகிறார்கள். அநாகரிக மாக சத்தம் போடுகிறார்கள்.

நான் இப்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்கி றேன். எனது குழந்தைக்கு தகப் பன் யாரென்று ஊருக்குத் தெரிய வேண்டும். ஆசிக், அவரது அத்தை, நண்பர்களிடமிருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார் துர்கேஸ்வரி.

பெண் விவகாரத்துக்காக...

திருச்சியில் பெண் விவகாரத் துக்காக பதவியை இழக்கும் இரண் டாவது நபர் ஆசிக் மீரா. முதலா மாவர் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பரஞ் சோதி. மரியம் பிச்சை உயிரிழந்ததால் வாழ்வு பெற்ற இருவரும் பெண் விவகாரத்தில் சிக்கி பதவியைப் பறிகொடுத்துள்ளனர்.

என்ன சொல்கிறார் ஆசிக் மீரா?

புகார் குறித்து, ஆசிக் மீராவிடம் பேசியபோது, “சொந்தக் கார ணங்களுக்காகவே நான் துணை மேயர் பதவியை ராஜி னாமா செய்தேன். இதில் வேறு காரணம் எதுவும் இல்லை. வெளியே கூறப்படும் தகவல்களுக் கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியாது” என சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x