ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் பின்னடைவு

ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் பின்னடைவு
Updated on
1 min read

ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் பின்தங்கியுள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் 19693 வாக்குகள் மட்டுமே பெற்று பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 23829 வாக்குகள் பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலில் நத்தம் தொகுதியில் போட்டியிட்ட விஸ்வநாதன் அமோக வெற்றி பெற்றார். மின் துறை அமைச்சராக உள்ள அவருக்கு இந்த முறை ஆத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி திமுகவுக்கு பலம் வாய்ந்த தொகுதி எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கேற்றாற் போல் ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் பின்தங்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in