Published : 10 May 2016 08:16 AM
Last Updated : 10 May 2016 08:16 AM

பிரச்சாரத்தின்போது அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

அனுமதிக்கப்பட்டதை விட கூடுத லாக பிரச்சாரத்துக்கு பயன்படுத் தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழகத்தில் 14-ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிந்து விடும் என்பதாலும் அரசியல் கட்சிகள் தொகுதியில் சுற்றிச் சுற்றி வாக்கு சேகரித்து வருகின்றன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக வரும் அதிகமான புகார்களால், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

அரசியல் கட்சிகளின் பிரச்சாரத் தின்போது 10 இருசக்கர வாகனங் கள் அனுமதிக்கப்படுகின்றன. இதற்கு மேல் வாகனம் பயன்படுத் தினால், கூடுதல் வாகனங்கள் பறி முதல் செய்யப்படும். அந்த வாக னங்களை வாக்கு எண்ணிக்கை முடியும் வரை திருப்பித் தர முடியாது. இதற்கான எழுத்துபூர்வ வழிகாட்டுதல்கள் உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டுவதற்கான வேட்பாளர் படம், பெயர், சின்னம் அடங்கிய சீட்டுகளை அச்சடிக்கும் பணி முடிந்துள்ளது. சென்னையில் நாளை 10-ம் தேதி ஒட்டும் பணி முடிக்கப்படும்.

வாக்குச்சாவடி

வாக்குப்பதிவு நாளன்று கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், வாக்குச்சாவடி மையங் களில் பந்தல் அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. முந்தைய தேர்தல் களில் இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களிடம் ரூ.1,000 வழங் கப்பட்டது. இந்த தேர்தலில், பந்தல் அமைக்க தனியாக தொகை ஒதுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

தபால் ஓட்டு

தேர்தல் பணியில் 92 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின் றனர். இவர்களுக்கு தபால் வாக் குக்கான படிவங்கள் வழங்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் தேர்தல் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை டெல்லி யில் இருந்தபடியே நாளை (10-ம் தேதி) காலை 11 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி காணொலி மூலம் ஆய்வு செய் கிறார். இதில், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர், வருமானவரி புலனாய்வுப் பிரிவு ஆணையர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட 300 கம்பெனி துணை ராணுவப் படையினரும் வந்து சேர்ந்துவிட்ட னர். அவர்கள் தேவையான தொகுதி களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கைகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, காங் கிரஸ், பாரதிய ஜனதா, தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, பாமக உள் ளிட்ட கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் திட்டங்கள் குறித்து தேர்தல் அறிக்கைகளை வெளி யிட்டுள்ளன.

பொதுவாக தேர்தல் அறிக்கை வெளியிடும்போது, ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் அதற்கான வருவாய் எங்கிருந்து கிடைக்கும் என்பதை விளக்க வேண்டும். இதை உச்ச நீதிமன்ற ஆணைப் படி, தேர்தல் நடத்தை விதிகளில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இல்லாத பட்சத்தில், உரிய நடவடிக் கையை தேர்தல் ஆணையம் சம்பந் தப்பட்ட கட்சியின் மீது எடுக்கும்.

இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அளித்த தேர்தல் அறிக்கை களை அனுப்பும்படி, தமிழக தேர் தல் துறைக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறும் போது, ‘‘நாங்கள் அரசியல் கட்சி களிடம் தேர்தல் அறிக்கையை அளிக்கும்படி கோரியுள்ளோம். அவர்கள் தந்ததும் தேர்தல் ஆணை யத்துக்கு அனுப்புவோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x