ஜகார்த்தா ஆசிய கோப்பை: தமிழக ஹாக்கி வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

அரியலூர் கார்த்தி மற்றும் கோவில்பட்டி மாரீஸ்வரன்  | படம்: ட்விட்டர்.
அரியலூர் கார்த்தி மற்றும் கோவில்பட்டி மாரீஸ்வரன் | படம்: ட்விட்டர்.
Updated on
1 min read

சென்னை: ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிலும் வெற்றிபெறட்டும் என்று தமிழக ஹாக்கி வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது.

ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்!'' இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in