

சென்னை: கல்வி தொலைக் காட்சியில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள் காலை மற்றும் மாலையில் ஒளிபரப்பு செய்யப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்கள் இக்கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.