வடமேற்கு திசையில் நகரும் ‘அசானி’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

வடமேற்கு திசையில் நகரும் ‘அசானி’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளி யிட்ட அறிக்கை:

‘அசானி’ தீவிர புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு - வடகிழக்கு திசையில் வட ஆந்திரா - ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும்.

இதன்காரணமாக 11, 12, 13,14-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அவ்வப்போது பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in