Published : 14 May 2016 09:12 AM
Last Updated : 14 May 2016 09:12 AM

ஜாதிக் கட்சியாக எங்களை அடையாளப்படுத்த கூடாது: ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை

தனது கட்சி வேட்பாளர்களுக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

தனித்து நிற்கவேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டது?

கூட்டணிக்குச் சென்றால் சில எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைப்பார்கள் என்றால் என்ன கொள்கைக்கு இயக்கத்தை ஆரம்பித்தோமோ அதுவே இல்லாமல் போய்விடும். இந்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு முன்னெப்போதை யும் விட வாக்குகளை பெற்றுக் காட்டுவதன் மூலம் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்ற கருத்தை முறியடிக்க முடியும்.

கொங்கு மண்டலத்துக்கு எழுத்து மாறாத வாக்குறுதிகளை ஆண்ட கட்சிகள் தருகின்றன என்று சொன்னீர்கள். அப்படி எதையாவது குறிப்பிட முடியுமா?

அவிநாசி அத்திக்கடவு திட்டம், ஆனைமலையாறு-நல்லாறு திட்டம், திருமணிமுத்தாறு திட்டம், கோழிப்பண்ணை ஆராய்ச்சி மையம், லாரி தொழிலுக்கு தனி வாரியம், விவசாய விளை பொருளுக்கு உரிய விலை, முருங்கைகாய் பவுடர் தொழிற்சாலை, தென்னை சார்ந்த தொழில் வளர்ச்சி, வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு, விசைத்தறி தொழில் மேம்படுத்துதல்.

பாமகவிலிருந்து உங்களை எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?

கொங்கு நாடு என்கிற ஒரே குடையின் கீழ் இங்கு வாழும் அனைத்து சமூகத்தினரை யும் அரவணைத்து, அவர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக் காக நாங்கள் பாடுபடுவதால்தான் ஜாதி கலவரமின்றி இங்கே அமைதி நிறைந்து காணப்படுகிறது.

பிரதானக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் குறித்து..

அதில் இலவசங்கள் தவிர மக்கள் எதையும் கவனிப்ப தில்லை. கட்சிக்காரர்களே அதை படிப்பதுமில்லை. ஒருத்தருக் குக்கூட அதில் என்ன இருக்கிறது எனத் தெரியாது. அதனால்தான் போன தேர்தல் அறிக்கையை பற்றி கூட கேட்க ஆளில்லை. மக்களும் அதை நம்புவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x