

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் இளைஞர் பலி யானார். படுகாயமடைந்த மற் றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பழைய ஆதனக்கோட்டையைச் சேர்ந்த நடராஜன் மகன் ரங்கசாமி(26). கொத்தனார். கடந்த சில மாதங்களாக திருச்சி நவல்பட்டு அருகேயுள்ள பூலான்குடி காலனி, வானவில் நகரில் தனது சகோதரி சாந்தியின் வீட்டில் வசித்து வந்தார்.
இவர், நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராஜசேகருடன்(24) துப்பாக்கி தொழிற்சாலை (ஓஎப்டி), கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை (எச்ஏபிபி) பகுதிகளில் கிடந்த பழைய இரும்புகளைச் சேகரித்தார். பின்னர் அவற்றை விற்பனை செய் வதற்காக நவல்பட்டு பர்மா காலனி யிலுள்ள ஒரு பழைய இரும்புக் கடைக்கு கொண்டு சென்றனர். அப் போது, கடை உரிமையாளர் திரு வெறும்பூர் பிரகாஷ் நகரைச் சேர்ந்த சுயம்பு வெளியே சென்றிருந்தார்.
எனவே, கொண்டு வந்த இரும் புப் பொருட்களை தரம் பிரிக்கும் பணியில் ரங்கசாமியும், ராஜசேக ரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுற்றிலும் மூடப்பட்டு, உருளை வடிவத்தில் கிடந்த ஒரு பொருளை சுத்தியலைக் கொண்டு உடைக்க முயன்றனர். அப்போது, அந்த பொருள் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், படுகாயமடைந்த ரங்கசாமி அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த ராஜசேகருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த நவல்பட்டு போலீ ஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர் கள் அங்கு விரைந்துசென்று, வெடித்த பொருளின் பாகங்களைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கடை உரிமையா ளர் சுயம்புவை பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் கூறும்போது, “இந்த வெடி பொருள் கிரெனட் லாஞ்சர் வகை யைச் சேர்ந்த சக்திவாய்ந்த வெடி குண்டு. இது எப்படி இவர்களின் கையில் கிடைத்தது எனத் தெரியவில்லை. அருகில், மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான சோதனைத் தளம் உள்ளது. அங்கு, வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட சோதனையின்போது, வெடிக்கா மல் சுற்றுச்சுவருக்கு வெளியே விழுந்த குண்டாக இது இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆனால், இதை உறுதிப்படுத்த முடிய வில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே பகுதியில் முட்புதரில், ராணு வத்தினருக்கான துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய கைப்பிடிகள் (பட்) கேட்பாரின்றிக் கிடந்தது குறிப்பிடத்தக்கது.
அமித்ஷா வருகையால் பரபரப்பு
காரைக்கால் உள்ளிட்ட பகுதி களில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, நேற்று இரவு தஞ்சையிலிருந்து கார் மூலம் திருச்சிக்கு வந்து, அதன்பின் தனி விமானம் மூலம் அகமதாபாத் செல்ல திட்டமிடப்பட்டிருந்தார். திருச்சி - தஞ்சை சாலையில் காட்டூர், அரியமங்கலம் பகுதியில் ஒருவேளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதற்கான மாற்று வழித் தடமாக, பெல் ரவுண்டானாவி லிருந்து துப்பாக்கி தொழிற்சாலை, அண்ணா நகர் வழியாக விமான நிலையம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் துப்பாக்கித் தொழிற்சாலை பகுதியில், குண்டு வெடித்து ஒருவர் இறந்ததால் அவ் வழியே செல்லும்விதமாக போடப் பட்டிருந்த மாற்று வழித்தட பயணத் திட்டம் கைவிடப்பட்டதாகவும், அமித்ஷா பயணம் மேற்கொண்ட வழித்தடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.