Published : 13 May 2016 09:19 AM
Last Updated : 13 May 2016 09:19 AM

சென்னையில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், சென்னையில் நேற்று வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை முடிவடைகிறது. இதை யடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். கொளுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், சென்னையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டார். காலை 8.15 மணிக்கு எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு மோதிலால் தெரு வுக்கு வந்த ஸ்டாலின், நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அந்த தொகுதி திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது கட்சித் தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

‘தேவை’ அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் இளங்கோ, மு.க.ஸ்டாலினிடம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள 30 ஆண்டு பிரச்சினை தொடர்பான மனு ஒன்றை கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுமார் 20 நிமிடங்கள் பிரச் சாரம் செய்த ஸ்டாலின், பின்னர் தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட வட பழனி முருகன் கோயில் அருகே வந்தார். அங்கிருந்து தெற்கு பெருமாள் கோயில் தெரு, பிள் ளையார் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் திமுக வேட்பாளர் டாக்டர் கனிமொழியை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமுமும், வீட்டு மாடிகளிலும் நின்றிருந்த மக்க ளைப் பார்த்து கையை அசைத்து வணக்கம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து துறை முகம் தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவுக்கு ஆதரவாக மண்ணடி, பாரிமுனை பகு திகளில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது அந்தந்த தொகுதி திமுக வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி யினர் உள்ளிட்டோர் திரளாகச் சென்றனர். ஸ்டாலின் நடந்து சென்று பிரச்சாரம் செய்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மண்ணடியில் பிரச்சாரம் செய்தபோது நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

இந்த தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஊழல், வசூல், கமிஷன் இல்லாமல் திமுக ஆட்சி நடத்தும். ஓட்டுக்காக அதிமுக தான் பணம் கொடுத்து வருகி றது. திமுக பணம் எதுவும் கொடுக்கவில்லை. இத்தேர்தலில் அதிமுகவுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் பட்டி யல் எங்களிடம் உள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தோல்வி பயத்தால்தான் ஜெய லலிதா வேனில் பிரச்சாரம் செய்கிறார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பின்னர் மாலையில் சைதாப் பேட்டை நேரு நகரில் திண் ணைப் பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பூவிருந்தவல்லி, தாம்பரம், பல்லாவரம், சோழிங்க நல்லூர் ஆகிய இடங்களில் வேனில் சென்று பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x