Published : 13 May 2016 08:07 AM
Last Updated : 13 May 2016 08:07 AM

கூட்டுறவு வங்கிகளில் கடன்தாரர் பட்டியல் தயாரிப்பு: கட்சிகளின் தள்ளுபடி அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என பலவிதமான வங்கி கள் வந்த பிறகும், இன்றும் கூட்டுறவு வங்கிகள் தமிழக கிராமப்புற மக்களின் நிதி சேவையில் தலை சிறந்த பங்காற்றி வருகின்றன. தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி கள், சிக்கன நாணயச் சங்கம், வீட்டு வசதி சங்கம், நிலவள வங்கி உள்ளிட்ட 4,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல் படுகின்றன.

இந்த வங்கிகளில் பயிர் கடன், சுயஉதவி குழு கடன், நகைக் கடன், சிறுதொழில் கடன், வீட்டுக் கடன், விவசாய வாகன, இடு பொருள் கடன் உள்ளிட்ட பல்வகை கடன்கள் வழங்கப்படுகின்றன. மழையில்லாமல், விவசாயத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக் காமல் விவசாயிகளால் சில நேரங்களில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை.

தொடரும் காத்திருப்பு

2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங் கிய ரூ.6,700 கோடி கடனை, தள்ளுபடி செய்தது. அதன்பின், அரசு தள்ளுபடி செய்யும் என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொருமுறையும் பெரும்பாலான விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்காமல் காத்திருப்பது தொடர்கிறது.

கட்சிகளின் அறிவிப்புகள்

இந்த தேர்தலில் அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளன. இதற்கெல்லாம் ஒருபடி மேலாகச் சென்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் திருவாரூர் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளின் கடன் களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

அதனால், யார் ஆட்சிக்கு வந் தாலும் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடியாவது உறுதியாகிவிட்ட தால் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மார்ச் 31-ம் தேதி வரை கடன் பெற்ற அனைத்து கடன்தாரர்கள் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பட்டியலில் 2006-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங் களில் கடன் தள்ளுபடி பெற்ற 80 சதவீதம் பேர் இடம்பெற்று இருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.

அதிகாரி தகவல்

கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏற்கெனவே ஒருமுறை கடன் தள்ளுபடியால் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு கள் ஸ்தம்பித்தன. அதிலிருந்து தற்போது ஓரளவு மீண்டுவரும் நிலையில் மீண்டும் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளதால் கூட்டுறவு சங்கங்கள் செயல்பாடு ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x