

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியில் கட்சியினர் ஈடுபட்டுள்ள நிலையில் அதை தடுக்க பறக்கும்படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பணம் பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு ரூ. 3.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆறு தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளிடையே போட்டி கடுமையாக உள்ளது. குறிப்பாக ஆத்தூர், நத்தம், திண்டுக்கல் தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலில் வெற்றிபெற கடைசிநேர யுக்தியாக, வாக்காளர்களுக்கு பணம் தர வாய்ப்புள்ளதால் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிரமாகக் கண் காணித்து வருகின்றனர்.
ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் போட்டிடுவதால் கூடுதல் பறக்கும்படை அமைத்து மாவட்ட தேர்தல் நிர்வாகம் நேரடியாக கண் காணித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ரெட்டி யார்சத்திரம் அருகே சில்வார்பட் டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படை அலுவலர் பழனிச்சாமிக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று அவர் சோதனை மேற்கொண்டதில் அதி முக பிரமுகர் அழகன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ. 3.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரெட்டியார் சத்திரம் போலீஸார் அழகனை கைது செய்தனர்.
திண்டுக்கல் முல்லைநகர் பகுதியில் அரசு ஊழியர்கள் வழ ங்கவேண்டிய பூத்சிலிப்களை அவ ர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி கட்சியினர் வாக்காளர்களிடம் வழங்கினர். அவ்வாறு வழங்கு ம்போது அவர்களின் செல்போன் எண்களை பெற்றுச் சென்றனர்.
மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படையினர் எவ்வளவுதான் தீவிரமாகக் கண்காணித்தாலும், அவர்களை ஏமாற்றிவிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியில் கட் சிகள் மும்முரமாக களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.