Published : 10 May 2022 03:53 PM
Last Updated : 10 May 2022 03:53 PM

'பறவை - பருந்து - ஆனந்தம்' - காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் 26 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: காவல்துறையினருக்கு இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டுத்தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, இளம் மற்றும் முதல்முறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் "பறவை" என்னும் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துதல், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க "பருந்து" என்ற செயலி உருவாக்குதல், பெண் காவலர்களுக்கான பணி - வாழ்க்கை சமநிலை குறித்த பயிற்சியினை "ஆனந்தம்" என்கிற திட்டத்தின் மூலமாக வழங்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவர் வெளியிட்ட78 முக்கிய அறிவிப்புகளில், சில அறிவிப்புகள்:

> ஒருங்கிணைந்த சுங்கச் சாவடி கண்காணிப்பு மையம் அமைத்தல்

> ஒவ்வொரு மண்டலத்திற்கும் நடமாடும் ஆளில்லா விமான அலகு (Drone) காவல் படைப்பிரிவினை விரிவுபடுத்துதல்

> சென்னை பெருநகரக் காவலில் 3 வழித் தடங்களில் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு மண்டலம் (TROZ - Traffic
RegulationObserved Zone) அமைத்தல்

> போதைப் பொருள் தடுப்பு, Cyber Crime, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் சாலை விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்

> இளம் மற்றும் முதல்முறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் "பறவை" என்னும் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துதல்

> இணையவழி குற்றங்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க " இணைய எச்சரிக்கை செயலி" மற்றும் " இணைய பாதுகாப்பு முகப்பு" உருவாக்குதல்

> சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க "பருந்து" என்ற செயலி உருவாக்குதல்

> காணாமல் போன மற்றும் திருட்டு வாகனங்களை கண்டறியும் செயலியை உருவாக்குதல்

> மதுவிலக்கு அமலாக்கப் பிரிவையும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவையும் இணைத்து மேம்படுத்தி "போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவாக" மறுசீரமைத்தல்.

> சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சிக் கல்லூரி (PTC) வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு (Tamil Nadu Police Academy) மாற்றுதல்.

> சிறப்பு புலனாய்வுக்கு உதவும் நிபுணர்களை பணியமர்த்துவதற்கான விசாரணைக் கட்டணங்கள் தொடர்பாக அதிகாரிகளின் அனுமதி அதிகாரத்தை உயர்த்துதல்

> குற்ற வழக்குகள், மதுவிலக்கு வழக்குகள் மற்றும் உணவுப் பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விடுதல் முறையை எளிமையாக்குதல்

> திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு (OCIU) ஆளிநர்களுக்கு 5 சதவீத சிறப்பு ஊதியமாக அளித்தல்

> காவல்துறையினருக்கு இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டுத்தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும்

> சென்னை பெருநகரில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலனை, மென்பொருள் மூலம் கண்காணித்தல்

> பெண் காவலர்களுக்கான பணி - வாழ்க்கை சமநிலை குறித்த பயிற்சியினை "ஆனந்தம்" என்கிற திட்டத்தின் மூலமாக வழங்குதல்

> தீயணைப்புத் துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு காவல் துறை மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் வசதி ஏற்படுத்துதல்.

> சென்னை பெருநகரக் காவலின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நிறுவப்பட்டுள்ள CCTV கேமராக்களை பராமரித்தல்

> மாநில காவல் தலைமையகத்தில், சமூக ஊடக மையம் (Social Media Centre) ஒன்று அமைத்தல்

> கடவுச்சீட்டு சரிபார்ப்பிற்காக கையடக்கக் கணினிகள் வாங்குதல்

> கோயம்புத்தூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதியதாக தடய மரபணு ஆய்வுப் பிரிவை உருவாக்குதல்

> பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகள் சம்பந்தப்பட்ட சான்றுப் பொருட்களை ஆய்வு செய்ய பிரத்யேக அலகு ஒன்று சென்னை தலைமை ஆய்வகத்தில் உருவாக்குதல்

> தீயணைப்பு பணியாளர்களுக்கு இடர்ப்படி உயர்த்தி வழங்குதல்.

> தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மிகைப்பணி ஊதியத்தை உயர்த்தி வழங்குதல்

> தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களை ரூபாய் 4.35 கோடி செலவில் மேம்படுத்துதல்

> தீ ஆணையம் (Fire Commission) ஒன்று புதியதாக அமைத்தல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x