Published : 05 May 2016 08:41 AM
Last Updated : 05 May 2016 08:41 AM

அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் பெயர், முகவரியை இணையதளத்தில் வெளியிடக் கோரி வழக்கு: விசாரணை ஜூன் 1-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் பெயர் மற்றும் முகவரியை இணையதளத்தில் வெளியிடக் கோரிய வழக்கில் கல்வித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடையாது.

இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி மே 2016 வரை மட்டும் தற்காலிக அடிப்படையில் ஒரே ஒருமுறை என்ற ரீதியில் அங்கீகாரம் வழங் கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட கடைபிடிக்க வில்லை. எனவே இந்த 746 பள்ளிகளையும் வரும் கல்வி யாண்டுக்குள் மூடிவிட வேண்டும்.

மே மாதத்துக்குப் பிறகு அவற்றை செயல்பட அனுமதிக்கக் கூடாது. மேலும் அந்தப் பள்ளி களில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் சேர்க்க வேண்டும். அந்த அங்கீகாரமற்ற 746 பள்ளி களின் பெயர் மற்றும் முக வரியை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

அப்பள்ளிகளில் புதிதாக மாணவர்களை சேர்க்க அனு மதிக்கக் கூடாது என கல்வித்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் பெயர் மற்றும் முகவரியை தமிழக கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை முதல் அமர்வுக்கு மாற்றி, விசாரணையை வரும் ஜூன் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x