Published : 10 May 2022 06:00 AM
Last Updated : 10 May 2022 06:00 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் உள்ளன. தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சமீப நாட்களாக அனல்மின் நிலையத்தில் இருக்கக்கூடிய 5 அலகுகளையும் தொடர்ச்சியாக இயக்க முடியாத நிலை உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. நேற்று 4 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 3-வது அலகில் சுமார் 204 மெகாவாட் உற்பத்தி நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT