

அரசியல் கட்சிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிடு வதால், அவற்றை நம்ப வேண் டாம் என வைகோ தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் போட்டி யிடும் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா வேட்பாளர் களை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலர் வைகோ நேற்று பிரச் சாரத்தில் ஈடுபட்டார். மதுரை ஆழ்வார்புரம் மற்றும் அனுப் பானடி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியது:
ஊழல், லஞ்சம் இல்லாத நிலை வேண்டும் என்பதே பொது மக்களின் கருத்து. ஊழலில் இருந்து விடுதலை பெற எங்களை ஆதரியுங்கள். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மதுக்கடைகளை மூடக்கோரி, பொதுமக்கள் கூறி வருகின்றனர். ஆனால் திமுக, அதிமுக கட்சி களால் மதுக்கடைகளை மூட முடியாது.
டீக்கடை, ஜவுளி வாங்க டோக்கன் என பல முறை களில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணிக்காக வெளிமாநிலங் களில் இருந்தும் பறக்கும் படை வந்துள்ளது. ஆனால், இதுவரை எந்த தேர்தலிலும் பறக்கும் படை யால் பண விநியோகத்தைத் தடுக்க முடியவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போலீஸாரை கடுமையான பணிகளை அளித்து துன்புறுத்த மாட்டோம். அனைவரும் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறும் நிலையை உரு வாக்குவோம். விவசாயக் கடன் ரத்து செய்யப்படும். கல்விக்கடன் உயர்த்தப்படும். தமிழ்நாட்டை அழிக்கும் வேலையில் மோடி ஈடுபட்டு வருகிறார்.
முன்னர் மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக - தமிழ் மாநில காங் கிரஸ் கூட்டணிக்கு 20% ஆதரவு இருப்பதாகக் கூறிய ஊடகங்கள் திடீரென 7% மட்டுமே ஆதரவு இருப்பதாக கூறுகின்றன. ஒரு கட்சிக்கு ஆதரவாக, எதிராக, நடுநிலையாகச் செயல்பட என அனைத்துக்கும் ஊடகங்கள் பணம் பெறுகின்றன. எனவே, கருத்துக் கணிப்புகளை நாம் ஒருபோதும் நம்ப வேண்டாம் என்றார்.