

சென்னை மாநகராட்சியில் உள்ள 32 பள்ளிகளில் இந்த ஆண்டு 5 ஆயிரத்து 859 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதினர். அதில் 5 ஆயிரத்து 534 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் முதல் 3 இடங்களை பிடித்த 6 மாணவி களும் வணிகவியல் பாடப்பிரிவை தேர்வு செய்து படித்தவர்கள். கடந்த ஆண்டு முதல் 3 இடங் களை பிடித்த மாணவிகளும் வணிகவியல் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1000 மதிப்பெண் களுக்கு மேல் பெற்ற 326 மாணவர்களில் பெரும்பாலானோர் வணிகவியல் மாணவர்களாகவே உள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கணிதம், அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை என பெற்றோர் மத்தியில் புகார் எழுந்துள்ளது. சில பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்குவதில்லை.
இதுபற்றி மாநகராட்சி கல்வித் துறை அதிகாரி ஒருவர், “மாநக ராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை, மாநக ராட்சி பள்ளிகளிலேயே மேல்நிலை வகுப்புகளில் சேர்க்க பெற்றோர் விரும்புவதில்லை. அவர்கள் தனியார் பள்ளிகளை நாடுகின்ற னர். அதனால் அப்பாடப்பிரிவு மாணவர்கள் உயர் மதிப்பெண் களை பெறுவதில்லை. பலர் வணிகவியல் பாடங்களையே விரும்புகின்றனர்” என்றார்.