விரைவில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: புதிய சபாநாயகர் யார்?

விரைவில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: புதிய சபாநாயகர் யார்?
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

தமிழகத்தில் புதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எம்எல்ஏக்களாக பதவி யேற்றதும், 15-வது சட்டப்பேரவை உருவாகும். ஏற்கெனவே, சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் தமிழகத்துக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தாக்கல் செய்தது.

தற்போது மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், புதிய அரசு சார்பில் 2016-17ம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக் கையை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக சட்டப்பேரவை கூட வேண் டும். இதற்கிடையில் இன்று சட்டப் பேரவை தற்காலிக தலைவர் செம் மலை பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடக்கிறது. பதவி யேற்பு விழா முடிந்ததும், சட்டப் பேரவை கூட்டம் தொடர்பாக, ஆளுநருடன் தற்காலிக சபாநாயகர் ஆலோசித்து முடிவெடுக்க உள் ளார். இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது.

சட்டப்பேரவை கூடும்போது, ஏற்கெனவே பதவியேற்றுள்ள எம்எல்ஏக்கள் கூடி, சட்டப்பேவைக் கான புதிய தலைவரை தேர்வு செய்வர். இவ்வாறு தேர்வு செய் யப்படும் சட்டப்பேரவைத் தலை வரை, தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இருக்கையில் அமர வைப்பர். இந்த நிகழ்வுகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் நடக்க வாய்ப்பு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், சட்டப்பேரவை வளாகத்தில் வண்ணம்பூசி அலங் கரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, விரைவாக நடந்து வருகின்றன.

புதிய தலைவர் யார்?

கடந்த 2011 தேர்தலில் முடிந் ததும், சட்டப்பேரவை தற்காலிக தலைவராக செ.கு.தமிழரசன் நிய மிக்கப்பட்டு, அதன் பின் டி.ஜெயக் குமார் சட்டப்பேரவைத் தலைவ ராக பதவியேற்றார். தொடர்ந்து, அவர் மாற்றப்பட்டு பி.தனபால் சட்டப்பேரவைத் தலைவரானார். அதே நேரம் இம்முறை சட்டப் பேரவை தற்காலிக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள செம் மலைக்கே தலைவராகும் வாய்ப்பு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in