

பாமக தலைமை நிலையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, 5 ஆண்டு களில் ஒரு கோடி வேலைவாய்ப்பு கள் உருவாக்கம் உள்ளிட்ட பாமக வேட்பாளர்கள் முன்வைக்கும் வாக்குறுதிகள் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளன.
பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என்றால் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியிலி ருந்து விலகுவோம் என்பதை குறிக்கும் வகையில் பாமக வேட் பாளர்கள் அனைவரும், ‘‘பணி செய்வேன் அல்லது பதவி விலகுவேன்’’ என்ற உறுதி மொழியை ஏற்க உள்ளனர். வரும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உட்பட அனைத்து பாமக வேட்பாளர் களும் அந்தந்த தொகுதிகளில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை அல்லது உருவப்படங்கள் முன் பாகவும் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறார்கள்.