Published : 09 May 2022 07:24 AM
Last Updated : 09 May 2022 07:24 AM
சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வரும் 22-ம் தேதி வரை திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக, திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகஅரசின் ஓராண்டு கால சாதனைகளை விளக்கி 234 தொகுதிகளிலும், `ஓயாத உழைப்பின் ஓராண்டுசாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்' மே 8-ம் தேதி முதல் (நேற்று) முதல் வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இந்தப் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்துக்கு மாவட்ட நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும். சிறப்புரையாற்றும் நிர்வாகிகள்
இந்தப் பொதுக்கூட்டங்களில் தொகுதிவாரியாக உரையாற்ற உள்ள நிர்வாகிகள் விவரம்: ஆத்தூர் (சேலம்) தொகுதி- முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர், தாம்பரம் - அமைச்சர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., புதுக்கோட்டை, திருவெறும்பூர், திருவையாறு- டி.ஆர்.பாலு எம்.பி. ஈரோடு இளையகோபால். பெரம் பூர்,மதுராந்தகம், செங்கல்பட்டு- அமைச்சர் கே.என்.நேரு, புலவர் சாமிநாகப்பன், சோம.செந்தமிழ்ச்செல்வன், ராயபுரம், சிங்காநல்லூர், சேலம் வடக்கு- அமைச்சர் க.பொன்முடி, மதுரை சுந்தரராஜன், பல்லாவரம், திரு.வி.க.நகர், திருவொற்றியூர்- ஆ.ராசா எம்.பி., தஞ்சை கூத்தரசன்.
கிணத்துக்கடவு, பொள்ளாச்சி- கனிமொழி எம்.பி., ஆலந்தூர், ராதாகிருஷ்ணன் நகர்- தயாநிதிமாறன் எம்.பி., சேப்பாக்கம் பிரபாகரன். திருவல்லிக்கேணி-சேப்பாக்கம்- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வனிதா பேகம். விருதுநகர், சிவகாசி, திருச்சுழி- அமைச்சர் தங்கம் தென்னரசு, சேலம் கோவிந்தன், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், ஆயிரம் விளக்கு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முசிறி,தொண்டாமுத்தூர், திருவிடைமருதூர்- அமைச்சர் மெய்யநாதன், குடந்தை ராமகிருஷ்ணன்.
திருத்தணி ஆலங்குளம்- அமைச்சர் ராஜ கண்ணப்பன், காஞ்சிபுரம், துறைமுகம்- தமிழச்சிதங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT