அதிமுக ஆட்சியில் அனைத்திலும் ஊழல்: இளங்கோவன் புகார்

அதிமுக ஆட்சியில் அனைத்திலும் ஊழல்: இளங்கோவன் புகார்
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் நசீர்அக மதுவை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலை வர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று பிரச்சாரம் மேற்கொண் டார். அப்போது அவர் பேசும் போது, “கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் எந்தத் துறையிலும் வளர்ச்சி பெறவில்லை. பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 92 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுதான் அதிமுக அரசின் சாதனையாகும்.

வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் தோல் தொழிற்சாலை மூடு விழா காணும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாதவர் ஜெயலலிதா.

கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை. எனவே, தமிழகம் வளர்ச்சி பெற ஆட்சி மாற்றம் அவசியம் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

தாராபுரத்தில்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காளிமுத்துவை ஆதரித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: அதிமுக சார்பில் தமிழகத்தில் வேட்பாளராக போட்டி யிடும் பலரும் கட்டப்பஞ்சாயத்து களில் ஈடுபட்டு வருபவர்கள். இதிலிருந்து அக்கட்சியின் நிலைப்பாட்டை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக காங்கயம் பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபியை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in