

பாஜகவின் காஞ்சிபுரம் வேட்பா ளர் வாசனுக்கு ஆதரவாக, அக் கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் நேற்று காஞ்சிபுரம் நகரத்தில் வாக்கு சேகரித்தார்.
காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் வாசன் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவ ரான இல.கணேசன், வாசனை ஆதரித்து காஞ்சிபுரம் நகரப்பகுதி களில் திறந்தவெளி வேனில் பிரச் சாரத்தில் ஈடுபட்டார். ஏகாம்பரநாதர் கோயில் அருகே தொடங்கி, நகராட்சி அலுவலகம், காமராஜர் வீதி, காந்திசாலை ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தேர்தல் ஆணை யம் தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளது. இதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு நாளுக்கு முன் பாக அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் நலக்கூட்டணியினால் தமிழகத்தில் மாற்றம் எதுவும் வந்து விடாது என்பதற்கு அவர்களின் செயல்பாடுகளே உதாரணம். தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய கட்சி என பாஜகவை நாங்கள் கூறவில்லை. திமுக, அதிமுகவுக்கு மாற்று கட்சியாக தமிழகத்தில் நாங்கள் உள்ளோம்’ என்று தெரிவித்தார்.