25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: தனியார் பள்ளிகளில் மே 30 வரை நீட்டிப்பு

25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: தனியார் பள்ளிகளில் மே 30 வரை நீட்டிப்பு
Updated on
1 min read

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) நுழைவு வகுப்புகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதில், ஏழை குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான கட்ட ணத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு அரசே செலுத்தி விடும்.

இந்நிலையில், 2016-17ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 3 முதல் 18-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஏழை மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பயனடையும் வகையில் விண்ணப்பிக்கும் தேதி மே 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கு நராக பொறுப்பு வகிக்கும் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in