Published : 18 May 2016 09:16 AM
Last Updated : 18 May 2016 09:16 AM

பல்வேறு சிறப்பு பயிற்சிகளால் 248 அரசு பள்ளிகள் 100 சதவீதம் பெற்று சாதனை: பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்

பிளஸ் 2 தேர்வில் 248 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களுக்கு அளிக் கப்பட்ட சிறப்பு பயிற்சிகள் காரணமாக இந்த ஆண்டு 248 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்த ஆண்டு 196 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. அரசு பள்ளிகளில் மாநில அளவில் காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கோவை ஒத்தக்கல் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் 82.17 சதவீதமும், மாநகராட்சிப் பள்ளிகள் 87.90 சதவீதமும், வனத்துறைப் பள்ளிகள் 88.74 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.85 சதவீதமும், அரசு பள்ளிகள் 85.71 சதவீதமும், அறநிலையத்துறை பள்ளிகள் 90.91 சதவீதமும், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் 90.28 சதவீதமும், நகராட்சிப் பள்ளிகள் 84.86 சதவீதமும், சமூகநலத்துறைப் பள்ளிகள் 90.50 சதவீதமும், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 83.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

இவ்வாறு தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x