

கள்ளக்குறிச்சி அருகே 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தெங்கியநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் விளைநிலத்தில் உள்ள கிணற்றின் அருகே மலைப்பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது. இது குறித்து விவசாயிகள் தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் 14 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 20 அடி நீளம், 70 கிலோ கொண்ட மலைப்பாம்புவை சாதுரியமாக பிடித்தனர்.
பின்னர் அந்தப் பாம்பை அருகே உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
20 அடி நீளம், 70 கிலோ கொண்ட மலைப்பாம்புவை சாதுரியமாக பிடித்தனர்.