இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர நாளை முதல் விண்ணப்பம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர நாளை முதல் விண்ணப்பம்
Updated on
1 min read

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:

தமிழகத்தில் 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்), 34 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 321 தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இங்கு 2 ஆண்டு கால தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) வழங்கப்படுகிறது. மேற்சொன்ன ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 830 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

2016-17-ம் கல்வி ஆண்டில் இடை நிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் மே 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 10-ம் தேதி வரை வழங்கப்படும்.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் மாவட்ட ஆசிரி யர் பயிற்சி நிறுவனங்களிலும் விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சாதிச் சான்றிதழ் நகலை தாக்கல் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய மையத்தில் ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல், இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியான கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in