பெண் டாக்டர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது: கொலையாளிகள் தோட்ட வேலை செய்ய வந்தவர்கள்

பெண் டாக்டர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது: கொலையாளிகள் தோட்ட வேலை செய்ய வந்தவர்கள்
Updated on
2 min read

பெண் டாக்டர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீ ஸார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே காந்தி இர்வின் சாலையில் வசித்த பிரபல புற்றுநோய் நிபுணர் ரோகிணி பிரேம்குமாரி(67) கடந்த 8-ம் தேதி தனது வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை குறித்து எழும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஓட்டல் உரிமையாளர், கட்டிட கான்ட்ராக்டர், ரோகிணியின் மகள் ரேஷ்மி நந்திதா, அவரது காதலர் உட்பட பலரிடம் விசாரணை நடத் தப்பட்டது. டாக்டர் ரோகிணி நில விவகாரத்தில் கொலை செய்யப் பட்டார் என்றும், வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள் திருடப்பட் டுள்ளது என்றும், கொலை செய் யப்பட்ட ரோகிணி அணிந்திருந்த நகைகள் எதுவுமே திருடு போக வில்லை என்றும் போலீஸ் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால். அவர் நகைக்காகத் தான் கொலை செய்யப்பட்டார் என்பது தற்போது தெரியவந் துள்ளது. அவரை கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை பெரு நகர காவல் ஆணையர் அசு தோஷ் சுக்லா நேற்று நிருபர் களிடம் கூறும்போது, "டாக்டர் ரோகிணியும், அவரது தாயாரும் தனியாக இருப்பதை அறிந்தவர் களே கொலை செய்திருக்க வேண்டும். எனவே, அவரது வீட்டுக்கு கடந்த 6 மாதத்தில் வந்து சென்றவர்கள் யார் என்ற பட்டியலை முதலில் தயார் செய் தோம். அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் ரோகிணியின் வீட்டுக்கு கான்ட்ராக்டர் ஒருவர் மூலம் தோட்ட வேலைக்காக 3 பேர் வந்து 5 நாட்கள் வேலை செய்திருப்பது தெரிய வந்தது.

நகைகள் பறிமுதல்

அந்த 3 பேரிடமும் விசாரித்த போது அவர்கள் கொலை செய்து கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தொம்பரம்பேடு பகுதியை சேர்ந்த ஹரி(20), ராஜா(21) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் என தெரிந்தது. அவர்களிடம் இருந்து செயின், மோதிரம், கம்மல் என மொத்தம் 4 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹரி, ராஜா இருவரும் சிறையில் அடைக்கப் பட்டனர். 17 வயது சிறுவன் புரசை வாக்கம் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்” என்று கூறினார்.

கூடுதல் ஆணையர் சங்கர், இணை ஆணையர் மனோகரன், துணை ஆணையர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

குற்றவாளிகளை பிடித்தது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "பிடிபட்ட 3 பேரும் தோட்ட வேலை செய்தபோது வீட்டில் இரு பெண்கள் மட்டுமே தனியாக இருக்கின்றனர் என் பதை தெரிந்துகொண்டனர். கொள்ளையடிக்கும் நோக்கில் 7-ம் தேதி நள்ளிரவில் சுற்றுச் சுவர் மீது ஏறிக்குதித்து 3 பேரும் உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்கவே, டாக்டர் ரோகிணி வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். உடனே 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கி, கழுத்தை மிதித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த 4 பவுன் நகைகளையும், செல்போனையும் கொள்ளை யடித்துவிட்டும், ரோகிணியின் உடல் மீது ஒரு சிமென்ட் மூட்டையை எடுத்து வைத்து விட்டும் சென்றுவிட்டனர்.

செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் இருக்கும் பகுதியை கண்டுபிடித்தாலும் உடனே பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in