Published : 07 May 2022 06:29 AM
Last Updated : 07 May 2022 06:29 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: பட்டினப் பிரவேசம் தொடர்பாக ஆதீனங்கள், மடாதிபதிகள் முதல்வரை சந்தித்து பேச உள்ளோம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: “தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் செய்யத்தடை விதித்திருப்பது மனவேதனைஅளிக்கிறது. ஆதீனங்கள் விஷயத்திலும், மடாதிபதிகள் விஷயத்திலும், கோயில் விஷயத்திலும் யாரும் தலையிட்டு இதைச் செய்ய கூடாது, அதைச் செய்ய கூடாது எனக் கூற அதிகாரம் இல்லை.
பட்டினப் பிரவேசம் தொடர்பாக ஆதீனங்கள், மடாதிபதிகள் முதல்வரை சந்தித்து பேச உள்ளோம். தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதுபோன்று ஆன்மிக விவகாரங்களில் தலையிடுவதால், தமிழக அரசுக்கு கெட்டப் பெயர்உண்டாகி வருகிறது. உறுதியாக தமிழக அரசு இதை ஏற்றுக்கொண்டு பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். குருவை சுமந்து கொண்டாடும் விஷயம் இது. இதில் யாரும் தலையிடக் கூடாது.
செண்டலங்கார ஜீயர் ‘அமைச்சர்களை, எம்எல்ஏக்களைநடமாட முடியாது’ எனக் கூறியது, அவரது சொந்தக் கருத்து. மதுரை ஆதீனம் தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது குறித்து தமிழக அரசிடம் முறையிட்டு உரிய பாதுகாப்பு கோரிமுறையிட வேண்டும். திமுகவில் இருக்கும் சில கருப்பு புள்ளிகளால்தான் கெட்டப் பெயர் ஏற்படுகிறது.
கிரிக்கெட் வீரர்கள், எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றவுடன் அவர்களை தோளில் சுமக்கிறார்கள். மத விவகாரங்களில் இதைச் செய், அதைச் செய் என யாரும் தலையிட உரிமை கிடையாது”
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT