

மக்களுக்கு யாராவது துரோகம் செய்தால் தொலைத்துவிடு வேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் மன் னார்குடியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
ஜெயலலிதாவுக்கு 110 என்ற நோய் உள்ளது. அவர் எப்போதும் 110 என்று கூறிக்கொண்டே இருப்பார். அவர் செய்த ஊழல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தேர்தலையொட்டி வாக்குக்கு ரூ.500 கொடுத்து மக்களை ஏமாற்றிவிடுகின்றனர். கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி வருவதற்குள் எனது இடுப்பு எலும்பு உடைந்துவிடும்போல இருந்தது. அந்த அளவுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன.
மக்களுக்கு யாராவது துரோகம் செய்தால், நான் தொலைத்துவிடுவேன். தவறுகள் செய்தால் தட்டிக்கேட்பேன். ஜெயலலிதா, சசிகலாவுக்கு பொய்யும் புரட்டும் கைவந்த கலை. ஜெயலலிதாவும், கருணாநிதியும் உளவுத்துறையினரையே நம்புகின்றனர். ஆனால், நான் மக்களையே நம்புகிறேன்.
காமராஜர் ‘படிங்க படிங்க’ என்றார். ஜெயலலிதாவோ ‘குடிங்க குடிங்க’ என்று சொல்கிறார். நான் அதிகம் கோபப்படுவதாக கூறுகின்றனர். கோபம் இல்லாதவன் மனிதனே இல்லை என்றார்.