

திமுக காங்கிரஸ் வேட்பாளர் களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி 2-வது நாளாக சென்னையில் நேற்று 8 இடங்களில் பிரச்சாரம் செய்தார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது முதற்கட்ட பிரச்சாரத்தை சென்னை சைதாப்பேட்டையில் கடந்த 23-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை மேற்கொண்டார். இதையடுத்து சென்னையில் காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் கடந்த 5-ம் தேதி கலந்து கொண்ட கருணாநிதி, நேற்று முன்தினம் மீண்டும் வேன் மூலம் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில் 2-வது நாளாக சென்னையில் அவர் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனை ஆத ரித்து வேனில் அமர்ந்தபடி பேசிய கருணாநிதி, ‘தமிழகத்தில் நல்லாட்சி மலர திமுக - காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறச் செய் யுங்கள்’ என்று கூறினார்.
மேலும், வேளச்சேரி வேட் பாளர் வாகை சந்திரசேகரை ஆதரித்து திருவான்மியூரிலும், சோழிங்கநல்லூர் வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்து மேடவாக்கத்திலும் கருணாநிதி வேனில் அமர்ந்தபடி பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து ஆலந்தூர் வேட் பாளர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, விருகம்பாக்கம் வேட்பாளர் தனசேகரன், தியாகராய நகர் வேட்பாளர் என்.எஸ்.கனிமொழி ஆகியோரை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.