

சென்னை அண்ணாநகர் தொகுதியில் பாஜக சார்பில் சுரேஷ் கருணா போட்டியிடுகிறார். நேற்றுகாலை தொகுதிக்கு உட் பட்ட அமைந்தகரை பகுதியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்ப தாக, அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சுரேஷ் கருணா மற்றும் பாஜக வினர் அங்கு சென்று பிரச்சா ரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அதிமுகவினருக் கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப் போது ஆத்திரமடைந்த அதிமுக வினர், பாஜக வட்டத் தலைவர் சத்திய நாராயணனை உருட்டைக் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வந்தது. காயமடைந்த சத்திய நாராயணன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து டி.பி.சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட ராணி வெலிங்டன் மேல் நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த பலரது பெயர்கள் பட்டிய லில் இல்லை. அதிமுக, திமுக இரு கட்சிகளை சேர்ந்தவர்களின் பெயர் களும் பட்டியலில் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக, திமுக கட்சிகளை சேர்ந்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இருதரப்பையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.
ராயபுரம், காசிமேடு, மீன்பிடி துறைமுகம் பகுதிகளில் 10-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள் களில் ஏராளமான இளைஞர்கள் வாக்குச்சாவடி மையங்கள் அருகே சுற்றி வந்தனர். அவர்கள் அனைவ ரையும் போலீஸார் சுற்றிவளைத்து பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாள ராக போட்டியிடுபவர் வழக்கறி ஞர் தமிழ்ச்செல்வன். திருவொற்றி யூரில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்ச்செல்வன் வாக்களிக்க சென் றபோது, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய, சிறிது நேரம் அந்த இடம் பரபரப்பானது.
சோழிங்கநல்லூர் தொகுதிக் குட் பட்ட ஈஞ்சம்பாக்கம் அமைதி கோயிலில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக் களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அதிமுகவினர் வாக்கு சேகரித்ததாக சொல்லப்படு கிறது. இதனால் திமுக, அதிமுக வினர் இடையே தகராறு ஏற் பட்டு, கைகலப்பானது. இதில் 3 பேர் லேசான காயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த நீலாங் கரை போலீஸார் இருதரப்பினரை யும் சமாதானம் செய்தனர்.