Published : 08 May 2016 12:23 PM
Last Updated : 08 May 2016 12:23 PM

வாஜ்பாயை பாராட்டிய மு.க.ஸ்டாலின்

மதுரையில் நேற்று ராகுல்காந்தி பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத் தில் பேசிய மு.க. ஸ்டாலின், அண்ணாவின் 150 ஆண்டுகால கனவுத் திட்டமான சேதுசமுத்திர திட்டம் உருவாக காரணமானவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்றார்.

மதுரை அருகே ஊமச்சிகுளம் மேனேந்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை பொதுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க திமுக பொருளாளர் ஸ்டாலின், மாலை 4.30 மணிக்கு வந்தார். ராகுல்காந்தி வரும் வரை மேடையின் பின்புறம் இருந்த கேரவனில் அமர்ந்திருந்தார்.

ராகுல்காந்தி வந்ததும், இரு வரும் சேர்ந்து மேடையேறினர். ஸ்டாலின் 4.35 மணிக்கு பேச ஆரம்பித்து 5 மணி வரை பேசினார். ராகுல்காந்தி 5 மணியில் இருந்து 5.25 வரை பேசினார். மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை தவிர, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு மட்டும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. மேடை யில் அமர்ந்திருந்த ப.சிதம் பரத்துக்கு பேச வாய்ப்பு வழங்க வில்லை. சோகமே உருவாக மேடையில் அவர் அமர்ந்திருந்தார். ஸ்டாலின் பேசும்போது 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை ப.சிதம்பரம் அந்த தேர்தலின் ஹீரோ என்று சொன்னது நினைவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், அண்ணாவின் 150 ஆண்டு கனவு திட்டமான சேதுசமுத்திர திட்டம் உருவாக முதலில் இசைவு கொடுத்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்றார்.

சமீபத்தில் மதுரைக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி, மோடியை என்னுடைய பழைய நண்பர் என்றும், அவர் நேர்மை யாக தமிழகத்தில் தேர்தல் நடை பெற உதவி செய்வார் என்றும் புகழ்ந்தார். அதுவே, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஸ்டாலின், அரசியல் பாகு பாடின்றி வாஜ்பாயை பாராட் டினாலும், அந்த மேடையில் ராகுல் காந்தியை வைத்துக் கொண்டே அவர் அவ்வாறு பாராட்டி பேசி யது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்தது. தொடர்ந்து கருணாநிதியும், ஸ்டாலி னும் பாஜகவை பாசத்துடன் அணுகிவருவது காங்கிரஸ் கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x