சென்னையில் முதல் கட்டமாக 5 கோட்டங்களில் புதைவட மின் கம்பிகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி 

சென்னையில் முதல் கட்டமாக 5 கோட்டங்களில் புதைவட மின் கம்பிகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி 
Updated on
1 min read

சென்னை: சென்னையில் முதல் கட்டமாக 5 கோட்டங்களில் புதைவட மின் கம்பிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் "வேலூர் தொகுதியில் உள்ள தோட்டபாளையம், மண்டித் தெரு, மூங்கில மண்டி, அண்ணா சாலை பகுதிகளில் புதைவட மின் கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பெரம்பூர், தாம்பரம், ஆவடி, அடையாறு, தகவல் தொழில்நுட்ப சாலை ஆகிய 5 கோட்டங்களில் இந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் இறுதி செய்யப்படும். அடுத்த ஆண்டு 7 கோட்டங்களுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி முழுவதும் இந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டபிறகு மற்ற மாநகராட்சிகளில் படிப்படியாக நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in