

கோவையில் நிருபர்களிடம் சிறுபான்மை சமூக புரட்சி இயக்க மாநிலத் தலைவர் க.லியாகத் அலிகான் நேற்று கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக ஜெயலலிதா அரசு மின்சார உற்பத்தியில் ஈடுபடவில்லை. கூடுதல் விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கி அரசு கருவூலத்தைக் காலி செய்ததுடன், கடன் சுமையையும் ஏற்றியுள்ளார். வெற்றி பெற்றதும் கருணாநிதி, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வார்.
தமிழக அரசு ஏற்கெனவே 40 சதவீத வருவாய் பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது. வருவாயை எப்படி பெருக்கப் போகிறார்கள் என்பதற்கான செயல்திட்டமும் இல்லை. இந்நிலையில், மீண்டும் இலவசங்களை அறிவித்தால் அரசு செயல்பட முடியாத நிலைக்குதான் தள்ளப்படும். ஜெயலலிதாவுக்கு மதுவிலக்கை அமல்படுத்த மனம் இல்லாததால்தான் படிப்படியாக மதுவிலக்கு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.