Published : 12 May 2016 09:49 AM
Last Updated : 12 May 2016 09:49 AM

மீத்தேன் திட்ட விவகாரத்தில் ஸ்டாலினுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ ஆவேசம்

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆத ரவாக தஞ்சையில் நேற்று பிரச் சாரம் செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியது:

மக்கள் நலக் கூட்டணிக்கு 8 சதவீத வாக்குகள்தான் கிடைக்கும், ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மக்கள் ஆதரவுடன் விஜயகாந்த் முதல்வராவது உறுதி. தனக்கு அதிமுகதான் ஒரே எதிரி என்று திமுகவும், திமுகதான் தனது எதிரி என்று அதிமுகவும் கூறுவது பித்தலாட்டம். அதிமுக ஆட்சியில், திமுகவினருக்குச் சொந்தமான மதுபான ஆலை களில் ரூ.24,000 கோடிக்கு மது வகைகளை கொள்முதல் செய்து, அதில் 15 சதவீத கமிஷன் பெற் றுள்ளனர். இதேபோல, கடந்த திமுக ஆட்சியில், சசிகலாவின் மிடாஸ் ஆலையிலிருந்து ரூ.20,000 கோடிக்கு மது வகை களை கொள்முதல் செய்து, அதில் 15 சதவீத கமிஷன் பெறப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட வர்கள் மதுவிலக்கு கொண்டு வருவார்களா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

காவிரி டெல்டா உள்ளிட்ட 17 மாவட்டங்களை சுடுகாடாக மாற்றும் மீத்தேன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டதை ஸ்டாலின் ஒப்புக் கொண் டுள்ளார். ஆனால், தனக்கு அதன் பாதிப்பு தெரியாது, திட்டத்தைத் தடுக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தற் போது அவர் கூறுகிறார்.

மத்திய அரசில் தனது குடும் பத்தைச் சேர்ந்த அழகிரி, தயாநிதி உள்ளிட்ட 7 பேரை அமைச்சர் களாக வைத்திருந்த இவர், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஸ்டாலினின் இந்த துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டு, திமுக, அதிமுக வினரின் ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டு, ஏலம் விடப்படும் என்றார் வைகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x