

திருப்பூர்: உடுமலை அதிமுக பெண் கவுன்சிலர் ரம்யா (45) கோவையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
உடுமலை 7-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ரம்யா (45). இவர் காந்திநகர் பகுதியில் குடியிருந்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.
இந்த நிலையில், ரம்யா கடந்த சில நாட்களாக, நோய்வாய்ப்பட்ட நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மேலும் மோசமாகவே சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதனையறிந்த உடுமலை மற்றும் திருப்பூர் மாவட்ட அதிமுகவினர், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் இறுதிச்சடங்குக்காக பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை தேவிபட்டினம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.