

மத்திய கனரக தொழில்கள்துறை இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட் டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அவருடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சுந்தர்ராஜன், இடிந்தகரை பங்குத்தந்தை ஜெயக்குமார், இடிந்தகரை, கூடங்குளம், சின்னமுட்டம், பெரு மணல் பகுதிகளைச் சேர்ந்த மீன வர் பிரதிநிதிகள் உடனிருந் தனர்.
சந்திப்புக்கு பின்னர் உதய குமார் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மகாராஷ்டிரம், ஜெய்தா பூரில் அணுஉலையை மூடவேண் டும் என்று அப்பகுதி மக்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச் சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று மத்திய இணைய மைச்சர் பொன்.ராதாகிருஷ் ணனிடம் வலியுறுத்தியுள்ளோம். அணுஉலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவரிடம் விளக்கியுள்ளோம்.
கூடங்குளத்தில் தற்போது, 3,4-வது அணுஉலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம், இடிந்தகரை, சின்னமுட்டம், பெருமணல் பகுதி பெண்கள் கூடங் குளம் அணுஉலை பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க பொன். ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர்.