

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சாலை விரிவாக்கத்திற்காக ஜே.சி.பி இயந்திரம் மூலம் மரத்தை அகற்றும் போது சாலையில் வந்த ஆட்டோவின் மீது மரம் விழுந்ததில் இருவர் பலியாகினர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள பத்தமடையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அப்போது ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மரத்தை பிடுங்கும் போது மரக்கிளை ஒன்று சாலையில் வந்துக் கொண்டிருந்த ஆட்டோவில் விழுந்தது. இதில் ஆட்டோவில் வந்த இருவர் பலியாகினர். பலியான இருவரும் ரஹ்மத், காதர் என்று தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையாக போலீஸார் ஜேசிபி ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மரம் விழுந்து இருவர் பலியான சம்பவம் பந்தமடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.