Published : 20 May 2016 08:55 AM
Last Updated : 20 May 2016 08:55 AM

4 தொகுதிகளில் பாஜக 2-வது இடம்

* பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தியாகராய நகர் தொகுதியில் 19 ஆயிரத்து 888 வாக்குகளுடன் 3-வது இடதுத்துக்கு தள்ளப்பட்டார்.

* பாஜக வேட்பாளர்களிலேயே அதிகபட்சமாக நாகர்கோவிலில் போட்டியிட்ட எம்.ஆர்.காந்தி 46 ஆயிரத்து 413 வாக்குகள் பெற்றார்.

* நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய 4 தொகுதிகளில் பாஜக 2-வது இடத்தைப் பிடித்தது.

* ஓ.பன்னீர்செல்வம் (போடி), எடப்பாடி கே.பழனிசாமி (எடப்பாடி), செல்லூர் கே.ராஜூ (மதுரை மேற்கு), ஆர். காமராஜ் (நன்னிலம்), பி.தங்கமணி (குமாரபாளையம்), எம்.சி.சம்பத் (கடலூர்), எஸ்.பி.வேலு மணி(தொண்டாமுத்தூர்), எஸ்.பி.சண் முகநாதன் (வைகுண்டம்), ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்), கே.டி.ராஜேந்திர பாலாஜி (சிவகாசி), கே.சி.வீரமணி (ஜோலார்ப்பேட்டை), தோப்பு என்.டி.வெங்கடாசலம் (பெருந்துறை), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) ஆகிய 13 அமைச் சர்கள் வெற்றி.

* நத்தம் ஆர்.விஸ்வநாதன் (ஆத்தூர்), ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்த நாடு), பி.மோகன் (சங்கராபுரம்), பி.வளர்மதி(ஆயிரம் விளக்கு), எஸ்.கோகுல இந்திரா (அண்ணாநகர்) ஆகிய அமைச்சர்கள் தோல்வி.

* தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 1.2 சதவீத வாக்குகளைப் பெற்றது. கடலூர் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் சீமான் 12,497 வாக்குகள் பெற்றார்.

* அதிமுக மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் (ஆலந்தூர்), சி.பொன்னையன் (சைதாப்பேட்டை) ஆகியோர் தோல்வி.

* நெய்வேலியில் தனி்த்துப் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் 30 ஆயிரத்து 528 வாக்குகள் பெற்றார்.

* புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் தோல்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x