

ஊடகங்களின் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யாகும். மக்கள் நலக் கூட்டணியே வெற்றி பெறும் என்று பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தெரிவித்தார்.
தான் போட்டியிடும் உளுந்தூர் பேட்டையில் விஜயகாந்த் நேற்று இறுதிக்கட்டப் பிரச் சாரம் மேற்கொண்டார். உளுந் தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘உளுந்தூர்பேட்டையில் மின் கட்டணம் செலுத்த 5 கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை அரசு திறந்து வைத்துள்ளது.
நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால் பேரூராட்சியாக உள்ள உளுந்தூர்பேட்டையை நகராட்சியாக தரம் உயர்த்து வேன். நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன். மருத்துவமனையை தரம் உயர்த்துவேன். சுத்தமான குடிநீர் கிடைக்கும். கலைக் கல்லூரி ஒன்றும் ஏற்படுத்தப்படும்.
தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக செயல் படுகின்றன. கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்புகளை மேற் கொண்டு வருகின்றன. ஊடகங்களின் கருத்துக் கணிப்பு கள் விரைவில் பொய்யாகும் என்றார்.